தளபதி விஜய் instagram பக்கத்தில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தளபதி விஜய் ட்விட்டர், பேஸ்புக் சமூக வலைதள பக்கங்களிலும் இருந்து வருகிறார். ‌

இனி இங்கேயும் விஜய் ராஜ்ஜியம் தான்.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம கொண்டாட்டம் - அந்த விஷயம் இதுதான்.!

இந்த சமூக வலைதள பக்கங்களில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை தனது படங்கள் பற்றிய போஸ்டர் டீசர் ட்ரைலர் போன்றவற்றை வெளியிட மட்டுமே தளபதி விஜய் பயன்படுத்தி வருகிறார். இதைத் தவிர்த்து இவர் வேறு எந்த விஷயங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதில்லை.

ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக அவருடைய ப்ரொபைல் தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைவார் எனவும் சொல்லப்படுகிறது.

இனி இங்கேயும் விஜய் ராஜ்ஜியம் தான்.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம கொண்டாட்டம் - அந்த விஷயம் இதுதான்.!

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் இனி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எங்க தளபதி ராஜ்யம் தான் என உற்சாகமடைந்துள்ளனர்.