Thalapathy Vijay Cinema Carrier History

தளபதி விஜயின் திரைப்பட வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Thalapathy Vijay Cinema Carrier History : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்தத் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின்னால் சில தோல்விகளையும் சந்தித்து உள்ளார் தளபதி விஜய். அவற்றைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

தனது பதினெட்டாம் வயதில் தந்தையின் இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்தத் திரைப்படத்தில் தோல்வியை சந்தித்தார்.

வெற்றிக்கான முதல் படி தோல்வி என்பதை நினைத்து 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் “பூவே உனக்காக” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் ரசிகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு “இளைய தளபதி” என்ற அடைமொழியையும் பெற்றார். பிறகு மாண்புமிகு மாணவன், லவ்டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, பிரியமுடன், நிலவே வா, துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, போன்ற திரைப்படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர்களின் மனதில் இளையதளபதி ஆகவும் இடம் பிடித்தார்.

இது போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் நடித்ததன் மூலமாக அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு தமிழன் என்ற அடையாளமும் இவருக்கு உண்டு.

நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் மாஸ்டர் வரை இவரது வெற்றிக்கு விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், காரணமாக அமைந்துள்ளது.

இதனால் மட்டுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி அனைவரின் மனதிலும் இளைய தளபதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.