பூஜா ஹெக்டேவிற்காக தம்முடைய பலவருட கொள்கையை தளர்த்திக் கொண்டு உள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Changes for Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ‌‌‌‌‌

பொதுவாக தளபதி விஜய் ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார். அவர் பல வருடங்களாக பின்பற்றி வருகிறார். ஆனால் தற்போது பீஸ்ட் படத்திற்காக இந்த கொள்கையை தளர்த்திக் கொண்டு உள்ளார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷூட்டிங்ஸ் நடைபெறுகிறது. இந்த சூட்டிங்கில் தளபதி விஜய் கலந்து கொள்கிறார். ‌‌

விஜய் தன்னுடைய பல வருட கொள்கையை பூஜாவிற்காக தளர்த்திக் கொண்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.