
தளபதி விஜய்க்கு பள்ளி சிறுவர் சிறுமியர்கள் பால் அபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
பொதுவாகவே விஜய் படங்கள் திரைக்கு வந்தால் அவருடைய பேனர், போஸ்டர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது கற்பூர ஆராதனை காட்டுவது என பல்வேறு செயல்களில் ஈடுபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
இதுபோன்ற செயல்களை விஜய் கண்டிக்க வேண்டும் என பலரும் கூறி வரும் நிலையில் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமியர்கள் விஜய்யின் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற செயல்கள் தேவையா? இதையெல்லாம் விஜய் கண்டிக்கலாமே என கூறி வருகின்றனர்.
மேலும் இது போன்ற செயல்களை விஜயின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுமென பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் இது போன்ற செயல்களைச்செய்யும் தன் ரசிகர்களை கண்டித்தால்தான் அவரை நல்ல மனிதர் என்று ஒத்துக்கொள்ள முடியும்..அவருக்கு நெருக்கமானவர்கள் அவர் பார்வைக்கு இதை கொண்டு செல்லுங்கள்????@VijayOfficial pic.twitter.com/4ekjCgmTJs
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) October 18, 2018
https://platform.twitter.com/widgets.js