இத கூட கவனிக்கலனா நீங்க எல்லாம் எதற்கு என ரசிகர் மன்ற தலைவர்களை விளாசி எடுத்துள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Blast Fans Club Leader : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயற்றியுள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சியை சென்ற பாலா என்ற விஜய் ரசிகர் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

என் போட்டோவ வச்சு ஏமாத்து வேலை செய்யாதீங்க.. தயாரிப்பாளர்களுக்கு யோகி பாபு வைத்த கோரிக்கை – வீடியோ.!!

தளபதி விஜய் கூட பாலாவின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த படம் குறித்து ரசிகர் மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது தன்னுடைய ரசிகர் பாலா ட்விட்டர் பக்கத்தில் மனமுடைந்து அவ்வளவு பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதையெல்லாம் நீங்கள் ஏன் கவனிக்கவில்லை? என ரசிகர் மன்ற தலைவர்களை விளாசி எடுத்துள்ளார்.

தளபதி விஜய் தன்னுடைய ரசிகனுக்காக ரசிகர் மன்ற தலைவர்களை திட்டியது அனைத்து காட்சிகளையும் நெகிழ வைத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் ரசிகனை ரசிக்கும் தலைவன் தளபதி என புகழ்ந்து பேசி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.