Thalapathy Vijay Best Friends

தளபதி விஜய் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய நண்பர்களைப் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Best Friends : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் நண்பன்.

3 இடியட்ஸ் என்ற படத்தின் ரீமேக்காக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

நடிகர் கார்த்தியின் திருமணத்தில் கலக்கலான லுக்கில் தளபதி விஜய் – திடீரென வைரலான வீடியோ!

இந்த படத்தின் பிரமோஷனுக்காக தளபதி விஜய் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய 6 நண்பர்களைப் பற்றி பேசியுள்ளார்.

ஸ்ரீநாத், சஞ்சய், மனோஜ், சுஜே, ராம்குமார், விஷ்ணு ஆகியோர் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் என கூறியுள்ளார் விஜய்.

மேலும் இவர்கள் தான் என்னுடைய எனர்ஜி மற்றும் எல்லாமே என் தெரிவித்துள்ளார். நடிக்க வந்த புதிதில் இவர்களிடம் தான் முதல் முறையாக டயலாக் பேசி காட்டியதாகவும் விஜய் நண்பர் கூறியுள்ளார்.

பத்திரிக்கையில் விஜயோட சேர்த்து என்னை பத்தி தப்பு தப்பா எழுதினாங்க.. என்னோட இந்த நிலைக்கு விஜய்யும் ஒரு காரணம் – வனிதா கூறிய ஷாக்கிங் தகவல்

மேலும் மற்ற நண்பர்கள் கூட்டத்தைப் போலவே நாங்களும் வாடா போடா என்று தான் பேசிக் கொள்வோம். சில சமயங்களில் அதைவிட மோசமாகவும் பேசிக் கொள்வோம் என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கூட நண்பர் ஒருவர் அவர், இவர் என பேசியதும் விஜய் அப்படி எல்லாம் பேசாதே எனக்கே கேட்க ஒரு மாதிரி இருக்கு என கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீநாத் நடிகர், டைரக்டர், ஆல் ரவுண்டர் எனக் கூறியுள்ளார். அதேபோல் சஞ்சீவ்வை சின்னத்திரை சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.