Thalapathy Vijay As a Director
27 வருடத்திற்கு பிறகு தளபதி விஜய் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார்.

Thalapathy Vijay As Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.

வரும் மார்ச் 15-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

எல்லாத்தையும் விட இதுல கொஞ்சம் தூக்கலா தான் இருக்கும்.. மாஸ்டர் செகண்ட் சிங்கிள் குறித்து வெளியான அதிரடி தகவல்கள்.!

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் இயக்குநராகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆம் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோர் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்களாம்.

அந்த காட்சியை விஜய் இயக்குனராக இருந்து கேமரா, ஆக்ஷன் என கூறி டைரக்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.