Thalapathy Vijay Angry on Sun Pictures

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் தளபதி விஜய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay Angry on Sun Pictures : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ளார். இவர் நண்பன் படத்தில் விஜய்யுடன் பணியாற்றியவர்.

தற்போது விஷயம் என்னவென்றால் மனோஜ் படத்தின் வேலைகளில் ஈடுபடும் போது குடித்து விட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது கோபத்தை காட்டியுள்ளார். ஏற்கனவே என் பெயரை கெடுக்க நிறைய பேர் வேலை செய்கின்றனர். இது வேறவா என கூறியுள்ளார். இதனால் ஒளிப்பதிவாளரை மாற்றிடலாமா என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேட்க வேண்டாம் குடிக்காமல் அவரை வேலை பார்க்க சொல்லுங்க அது போதும் என தெரிவித்து விட்டதாக பிரபல பத்திரிக்கையாளர்கள் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளனர்.