Thalapathy Vijay About Vivek

குழி பறிக்கிறவங்களை பார்த்தால் கோபம் தான் வரும் ஆனால் விவேக் என விஜய் பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Thalapathy Vijay About Vivek : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவு வெள்ளித்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் விவேக் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். அவருடன் பணியாற்றிய அனுபவங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். ‌‌

இந்த நிலையில் தளபதி விஜய் நிகழ்ச்சி ஒன்றில் விவேக் குறித்து பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குழி பறிக்கிறவங்கல பார்த்தால் கோபம் தான் வரும். ‌‌ ஆனால் விவேக் அவர்களைப் பார்த்தால் மதிப்பு தான் வருகிறது.

சினிமாவில் சாதித்து விட்டார். சமுதாயத்துக்கும் செய்யணும் என்று பேசினார். தற்போது செய்தும் வருகிறார், இன்னும் செய்து கொண்டும் இருப்பார் என புகழ்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.