சித்தார்த்திடம் இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என ஓப்பனாவே பேசியுள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay About Sidharth : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். மாதவனுக்கு அடுத்ததாக இளம் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவராக சாக்லேட் பாயாக வலம் வருகிறார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

சித்தார்த்திடம் இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் - ஓபனாக பேசிய தளபதி விஜய், தீயாக பரவிய பேட்டி வீடியோ.!!

இவர் சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக தமது கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால் சித்தார்த்திற்கு சித்தார்த் குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதற்கெல்லாம் அசரும் மாட்டேன் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது என தெரிவித்து வருகிறார். சித்தார்த்துக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் பழைய பேட்டி ஒன்றில் சித்தார்த் குறித்து பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது எனக்கும் சித்தார்த்தை மிகவும் பிடிக்கும். அதிலும் அவருடைய க்யூட்னஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சித்தார்த்தின் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் சித்தார்த் குறித்து பேசிய வீடியோவை சமூக வலைத் தளங்களில் ஷேர் செய்து ரசிகர்கள் நாங்களும் சித்தார்த்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.