கேர்ள் ஃபிரண்ட் குறித்து பேசி சிக்கியுள்ளார் தளபதி விஜய்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கேர்ள் ஃப்ரெண்ட் குறித்து பேசி சிக்கிய விஜய்.. ஆடியோ லாஞ்சில் தெரிய வந்த உண்மை.!!

இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பல்வேறு விஷயங்களை பேசினார். தனக்கு போட்டியாக ஜோசப் விஜய் 1991 ஆம் ஆண்டில் உருவானதாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் குஷ்பூவை பார்க்கும் போது தனக்கு சின்னத்தம்பி படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்துக்காக வரிசையில் நின்று அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி தன்னுடைய நண்பர்கள் மற்றும் கேர்ள் பிரண்டுடன் சேர்ந்து படம் பார்க்க விஷயம் தான் ஞாபகம் வருவதாக பேசினார். உடனே ரம்யா யார் அந்த கேர்ள் பிரண்ட் என கேட்க சுதாரித்துக் கொண்ட விஜய் அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டார்.

கேர்ள் ஃப்ரெண்ட் குறித்து பேசி சிக்கிய விஜய்.. ஆடியோ லாஞ்சில் தெரிய வந்த உண்மை.!!

இதனால் நெட்டிசன்கள் பலரும் தளபதி விஜய் ஓட கேர்ள் பிரண்ட் யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.