டான் படத்தை தளபதி விஜய் பாராட்டியதாக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay About Don Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

தமிழகத்தில், எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை?

இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூலில் பெரும் வேட்டையாடியது. தற்போது வரை பல திரையரங்குகளில் நல்ல கூட்டத்துடன் படம் திரையிடப்பட்டு வருகிறது.

எனக்கு ஏன் இவ்ளோ பெரிய build-up கொடுக்கிறீங்க! – அரங்கை அதிர விட்ட Yuvan ரசிகர்கள்! | Maanaadu HD

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் டான் படம் பற்றி பேசியுள்ளார். இந்த படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறியபோது அவர் படத்தை நிராகரித்து விட்டார். பிறகு கதையில் பல மாற்றங்களை செய்து 25 வெர்ஷனில் அவரிடம் சொல்லும் போது பணியாற்ற ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் கதையை வைத்து உருவாக்கிய குறும்படத்தை மெர்சல் படத்தின் போது தளபதி விஜய்யிடம் போட்டுக் காண்பித்தேன். படத்தைப் பார்த்த விஜய் பாராட்டினார் என தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காலேஜ் மாணவராக நடிக்க எஸ் ஜே சூர்யா பிரின்ஸ்பளாக நடித்துள்ளார். காமெடி ஜானரில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.