Thalapathy Role Update in Beast Movie

பீஸ்ட் படத்தில் விஜயின் ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Role Update in Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் விஜய் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தற்போது வரை ரகசியமாக வைக்கப்பட்டு வந்த நிலையில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jai Bhim படம் பார்த்தேன்…என்னா படங்க?? – Prabhu Deva Bold Speech..! | Thel Press Meet | Suriya HD

ஐசிசி அறிவித்த அணியில், ஒருவர் கூட இந்திய வீரர் இல்லை ஏன்? : வைரல் விவாதம்

ஏற்கனவே விஜய் ராணுவ உளவுப் அதிகாரியாக துப்பாக்கி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் நிலையில் தற்போது மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் இந்தப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காக்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேலையில் இந்த படத்தை கோடை விடுமுறை விருந்தாக ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.