Thalapathy Next Movie Update

தளபதி 66 மற்றும் 67 இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தளபதி 65. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

தற்போது தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக வெளி வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பிலும் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை இயக்குனர் அட்லி இயக்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.