சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்ற விவாதம் முடிவுக்கு வந்து விட்டது. அவர் வரவே மாட்டார் என்பது தெளிவாக விட்டது.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களோடு உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். ஏற்கனவே, அவருடைய “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிக மிகப் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வரும் நிலையில், தற்போது அவருடைய 69-வது மற்றும் இறுதி திரைப்படம் குறித்த அறிவிப்புகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாக தொடங்கி உள்ளன.
பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக தமிழ் திரையுலகில் களமிறங்கும், தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே பிரபலமான KVN என்ற தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வழங்க உள்ளது.
இந்த சூழலில், தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்த நிலையில், மாநாடு நடைபெறும் பரபரப்பான சூழ்நிலையில், இன்று- செப்டம்பர் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு தளபதி 69 திரைப்பட குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பரபரப்புக்கு, தளபதி விஜய்யின் அறிவிப்பு என்னவோ.! பார்க்கலாம்..