thalapathy 69 movie latest update
thalapathy 69 movie latest update

தளபதி 69 படத்தில் பிரபல நடிகை இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது மட்டுமில்லாமல், வசூலிலும் விரட்டி வருகிறது என்றும் சொல்லலாம்.

இதனை தொடர்ந்து விஜய் இறுதியாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால்,இந்த கடைசி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தளபதி 69 படம் குறித்து ஒரு லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.