தளபதி 68 எந்த மாதிரியான படம் என வெங்கட் பிரபு ஓபனாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இதையடுத்து தற்போது வெங்கட் பிரபு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இந்த படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசி உள்ளார். அதாவது நான் சீரியஸா படம் எடுத்தா ஓட மாட்டேங்குது, என்டர்டைன்மென்டான படம் எடுத்தால்தான் நன்றாக ஓடுகிறது.

ஆகையால் இனி என்னுடைய படங்கள் எல்லாமே என்டர்டைன்மெண்ட் படங்களாக தான் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் தளபதி விஜயை வைத்து எடுக்கும் படமும் ஒரு ரகளையான கலாட்டா கலந்த என்டர்டைன்மென்ட் திரைப்படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அஜித்துக்கு மங்காத்தா போல விஜய்க்கு தளபதி 68 படம் கண்டிப்பாக ஹிட் தான் என விஜய் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.