தளபதி விஜய் பச்சைக்கொடி காட்டியதால் தளபதி 67 படம் எப்போது தொடங்குது என தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தளபதி விஜய் பச்சைக்கொடி காட்டியதால் படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.