நான்காவது முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக உள்ள பிரபல நடிகை ஒருவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் விஜய்யுடன் சமந்தா தெறி, மெர்சல் மற்றும் கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்ததை தொடர்ந்து தளபதி 67 படத்தின் மூலமாக விஜயுடன் நான்காவது முறையாக ஜோடி சேர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.