Thalapathy 66 With H Vinoth

எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 66 With H Vinoth : தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் தல அஜித்துடன் கூட்டணி வைத்து நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 66 படத்தினை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில் இது குறித்து விசாரிக்கையில் தற்போதைக்கு அப்படி எந்த ஒரு ஐடியாவும் இல்லை. முதலில் அஜித்தின் படத்தினை முடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.