தளபதி 66 படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thalapathy 66 USA Rights Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 66 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

தமன் இசையமைக்க இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை அகிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தளபதி 66 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தையும் அமெரிக்காவில் வெளியிட்டு நல்ல லாபத்தை பார்த்த நிறுவனம்தான் அகிம்சா என்டர்டெய்ன்மென்ட். தற்போது தளபதி அறுபத்தி ஆறு படத்தையும் கைப்பற்றி இருப்பதை இந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.