வித்தியாசமான நோயால் தளபதி விஜய் பாதிக்கப்படுவது போன்ற கதையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 66 Storyline Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் பெயரிடப்படாத தளபதி 66 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜூ தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் கதை குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது விஜய் இந்த படத்தில் எரோட்டோமேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரோட்டோமேனியா என்பது கற்பனையில் தன்னை ஒருவர் காதலிப்பது போன்றதாகும். இந்த கதாபாத்திரத்தில் விஜய் எப்படி நடிக்கிறார் என்னவெல்லாம் சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம் என தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.