அதிரடி போஸ்டருடன் தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற பீஸ்ட் இப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் விஜயின் அம்மாவாக பிரபல நடிகை ஜெயசுதா நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் முதல் செட்யூல் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் அடுத்த வருட பொங்கல் தளபதி பொங்கல் என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆகி விட்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.