Thalapathy 66 Production Company
Thalapathy 66 Production Company

விஜயுடன் பிரமாண்ட நிறுவனம் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Production Company : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

மக்களின் அச்சத்தைப் போக்க மாஸ்டர் படத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போடும் பக்கா பிளான்!

அதன் பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதுகுறித்த தகவல்களை தற்போதிலிருந்தே வைரலாக தொடங்கியுள்ளன.

இந்தப்படத்தை அட்லி அல்லது மகிழ்திருமேனி அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்க மாஸ்டர் படத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போடும் பக்கா பிளான்!

உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரித்து வரும் எண்டோமால் ஷைன் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இது ஒரு பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.