தளபதி 66 படத்தின் நாயகி யார் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Thalapathy 66 Movie Heroine List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாவதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தகவல் வெளியானது. அதன்பிறகு ராஷ்மிகா மந்தனா என பேசப்பட்டது. பின்னர் தமன்னா நாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சனோன் என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உண்மையில் இந்த நடிகைகளில் யார் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.