Thalapathy 66 Movie Director Update
Thalapathy 66 Movie Director Update

தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை தன்னுடைய படத்தை இயக்குமாறு இழுத்து போட்டு உள்ளார் தளபதி விஜய்.

Thalapathy 66 Movie Director Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

Siruthai Siva

இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தை சீரியல் போன்று உள்ளது என விஜய் ரசிகர்கள் கிண்டலடித்த நிலையில் விஜய் அவருடனே கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.