Thalapathy 66 Movie Director
Thalapathy 66 Movie Director

தளபதி 65 படம் தொடங்குவது எப்போது எனவும் தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Movie Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், விஜய் டிவி தீனா, விஜய் டிவி ரம்யா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காக்க ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இப்படம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் தளபதி 65 படத்தை முடித்துவிட்டு விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒரே நேரத்தில் தளபதி 65 மற்றும் தளபதி 66 படங்களை பற்றிய தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் இயக்குனர் முருகதாஸ் தளபதி 65 படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல இது புத்தம் புதிய ஸ்கிரிப்ட் என பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.