Thalapathy 66 Heroine Update

தளபதி 66 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Heroine Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தினை தில் ராஜு மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயுடன் பைரவா மற்றும் சர்கார் என இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.