தளபதி 65 பட தகவலை தொடர்ந்து தளபதி 66 குறித்த தகவல் ஒன்றும் இணையத்தில் கசிந்துள்ளது.
Thalapathy 66 Director Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் துப்பாக்கி 2-வாக உருவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த படத்தின் தகவல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் தளபதி 66 படம் பற்றியும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
இப்படத்தை சசிகுமார் இயக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இதனை தன்னை படத்தில் நடிக்குமாறு அணுகிய ஒருவரிடம் சசிகுமாரே கூறியிருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை? விஜய் சசிகுமார் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா? என்பதெல்லாம் அறிவிப்பு வந்தால் தான் தெரியும்.