Vijay 65 Movie
விஜயின் அடுத்த படமான தளபதி 65 பற்றி எடுக்கப்பட்ட ஓட்டிங் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தளபதி 65 படத்தின் இயக்குனர் யாராக இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என ஓட்டெடுப்பு நடத்தினோம். ஆப்ஷன்களாக ஷங்கர், பேரரசு, முருகதாஸ், அட்லீ என நான்கு பெயரை குறிப்பிட்டிருந்தோம்.

அதன் முடிவுகளை பார்க்கலாம் வாங்க.

ட்விட்டர் முடிவுகள் :

ட்விட்டரில் குறைவான ஓட்டுகள் தான் பதிவாகியுள்ளன. ஷங்கர் (47% )அதிகமான ஓட்டுகளை பெற பேரரசு ( 22% )அடுத்த இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை முருகதாஸ் (19% )பிடித்துள்ளார். அட்லீக்கு (12%) நான்காம் இடமே கிடைத்துள்ளது.

 

Hello பக்க முடிவுகள் :

மொத்தம் 7,300 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. 39% மக்கள் ஷங்கருக்கு ஓட்டளித்துள்ளனர். முருகதாஸ் மற்றும் அட்லீ ஆகியோர் 27% ஓட்டுகளை பெற பேரரசு 7% ஓட்டுகளை பெற்றுள்ளார்.

யூ ட்யூப் முடிவுகள் :

யூ ட்யூப்பில் 7,600 ஒட்டு பதிவாக அதிலும் ஷங்கர் 54% ஓட்டுகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

முருகதாஸ் 22% ஓட்டுகளுடன் இரண்டாம் இடமும் பேரரசு 13% ஓட்டுகளையும் அட்லீ 11% ஓட்டுகளையும் பெற்றுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.