Thalapathy 65 Villian Update

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Thalapathy 65 Villian Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற பெயரிடாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு வில்லனாக இந்த படத்தில் அருண்விஜய் நடிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி என பெயர் பொருத்தத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் அடுத்ததாக விஜய், அருண் விஜய் என்ற பொருத்தத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டணி அமைவது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.