Thalapathy 65 Villian Update

தளபதி 65 படத்தின் வில்லன் யார் என்பது பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Thalapathy 65 Villian Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது‌.

மாஸ்டர் படத்தினைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் Shine Tom Chacko நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இத் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.