Thalapathy 65 Villian Update

தளபதி 65 படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Thalapathy 65 Villian Update : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தளபதி 65.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இப்படம் உருவாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் எனவும் அவருக்கு ரூபாய் 1.5 கோடி சம்பளம் கொடுக்க சன்பிக்சர்ஸ் முன்வந்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அருண் விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் அடுத்த படங்களின் லிஸ்ட்டில் தளபதி 65 படமும் சேர்த்திருப்பதால் இவர் தான் வில்லன் என தகவல் தீயாக பரவி வருகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.