Latest Update of Thalapathy 65
Latest Update of Thalapathy 65

தளபதி 65 படத்தின் வில்லன் மற்றும் நாயகி யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Thalapathy 65 Villian and Heroine Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 65 என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

thalapathy 65

இந்தப் படத்தில் தளபதி விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நாயகி யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. தளபதி 65 படத்தில் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரம் என்பதால் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர்.

இதற்காக நடிகை காஜல் அகர்வால் மற்றும் தமன்னா ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகளை அடுத்த வருட தொடக்கத்தில் தொடங்கி தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.