Thalapathy 65 Title Clarification
Thalapathy 65 Title Clarification

தளபதி 65 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Thalapathy 65 Title Clarification : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெகு விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய், முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது.

அது இது இல்ல யாரும் நம்பாதீங்க.. தளபதி 65 அறிவிப்பை வெளியிட்ட முருகதாஸ் – வதந்திக்கு ஃபுல் ஸ்டாப்!

சமீபத்தில் இந்த படத்திற்கு தளபதி என டைட்டில் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் படக்குழு இது முற்றிலும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தளபதி என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.