Thalapathy 65 Stunt Update

தளபதி 65 படம் வந்தால் பிரம்மாண்ட படமான KGF படத்தையே மறந்துடுவீங்க என பேசியுள்ளார் முக்கிய பிரபலம் ஒருவர்.

Thalapathy 65 Stunt Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் குழுவில் உள்ள ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தளபதி 65 படம் வெளியானால் KGF படத்தின் சண்டைக் காட்சிகளை மறந்து விடுவீர்கள். அந்த அளவிற்கு செம மாஸாக தளபதி 65 சண்டை காட்சிகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.