Thalapathy 65

தளபதி 65 படத்தின் சூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 65 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்புகள் முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பி விடும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அடுத்து ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.