Thalapathy-65

சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட கையோடு வெளிநாட்டுக்கு பறந்துள்ளார் நடிகர் விஜய். அதற்கான காரணங்கள் என்ன என புகைப்படத்தை வெளியாகியுளளது.

Thalapathy 65 Shooting in Overseas : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்ற படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் நேற்று நடந்த தேர்தலில் தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்கை செலுத்தினார். வெப்சைட்டில் வந்ததற்கான காரணம் என்ன பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த நூதன முயற்சியா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட கையோடு வெளிநாட்டுக்கு பறந்த விஜய்.. வெளியான புகைப்படம் - காரணம் என்ன??

ஆனால் விஜய் மக்கள் தொடர்பாளராக ரியாஸ் இது சாதாரணமாக நடந்த விஷயம் என விளக்கம் அளித்தார். இது ஒரு புறமிருக்க நேற்று ஓட்டு போட்ட விஜய் அடுத்ததாக உடனடியாக வெளிநாடு கிளம்பியுள்ளார். அவர் தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு ஒரு வாரம் நடக்கும் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு படக்குழு சென்னையில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். பின்னர் படக்குழு ரஷ்யாவிற்கு செல்ல இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.