தளபதி 65 சூட்டிங் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து ருசிகர தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Thalapathy 65 Shooting and Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாக்கி அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர்.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் இப்படம் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது இப்படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி முடித்து விட்டு 2021 தீபாவளிக்கு தளபதி 65 படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தைப் போலவே தளபதி அறிவித்த இந்தி திரைப்படமும் நல்ல உற்சாகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.