Thalapathy 65 producer : Thalapathy 65, Vijay, Yogi Babu, Thalapthy Vijay, BIgil, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன் பற்றிய தகவல் தான் தற்போது சமூக வளையதளங்களில் படு ட்ரெண்டாகி வருகிறது.

Thalapathy 65 producer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் பிரிட்டோ தயாரிப்பிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? அந்த படத்தை யார் தயாரிப்பார்? என்ற எதிர்பார்ப்பெல்லாம் உச்சம் தொட்டுள்ளது.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

இந்நிலையில் தற்போது தகவல் ஒன்று வைரலாகி வருகிறது, அதாவது பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் விஜயை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் பதில் ஏதும் சொல்லாமல் புன்சிரிப்புடன் சென்றுள்ளார். இதனால் விஜயின் புன்சிரிப்பு சம்மதிற்கு ஓகே என்று தான் கூறுகின்றனர் கோலிவுட் வட்டாரம்.

ஆனால் உண்மை என்ன விஜய் கால்ஷீட் கொடுப்பாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.