Thalapathy 65 Music Composer Details
Thalapathy 65 Music Composer Details

ஒரே பாட்டில் விஜயை கவர்ந்து தளபதி 65 படத்திற்கு இசையமைப்பாளர் ஆகியுள்ளார் பிரபலம் ஒருவர்.

Thalapathy 65 Music Composer Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

படமே ரெடியாகல அதற்குள் தளபதி 65 ரிலீஸ் தேதி குறித்து வெளியான செம மாஸ் தகவல்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்த படங்கள் சரியாக செல்லாததால் வேறு ஒருவரை கமிட் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் முட்டை பொம்மா பாடல் மூலம் அனைவரையும் ஆடவைத்த தமன் விஜயையும் கவர்ந்துள்ளார்.

இதனால் தளபதி 65 படத்திற்கு தமனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.