Thalapathy 65 Movie Villian Update

விஜய் 65 படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Movie Villian Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.