Thalapathy 65 Movie Secrets

சிம்பு நிராகரித்த கதையில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thalapathy 65 Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நெல்சன் மற்றும் சிம்பு இணைந்து பணியாற்ற இருந்த வேட்டை மன்னன் படத்தின் கதை தான் தளபதி 65 படமா என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த படத்திற்கு டார்கெட் ராஜா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டைட்டில் வேட்டை மன்னன் பட டைட்டிலோடு ஒன்றி போவதால் இந்த பேச்சு அடிபட்டு வருகிறது.