Thalapathy 65 Movie Heroine Update
Thalapathy 65 Movie Heroine Update

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜயின் படத்தில் பிரபல நடிகை நாயகியாக ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thalapathy 65 Movie Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மகேந்திரன், சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், ரம்யா, வர்ஷா பொல்லம்மா என பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க ஆடை, மேயாத மான் ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் லோகேஷ் உடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய் 65 படத்தில் நடிக்க உள்ளார்.

கமல், கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் வேட்டையாடு விளையாடு 2, நாயகி இவர் தானா? – வெளியான சூப்பர் தகவல்.!

இந்த படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலை தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தில் நாயகியாக அசின் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே விஜய்யுடன் காவலன், சிவகாசி ஆகிய படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பின்னர் நடிக்காமல் இருந்து வந்த அசின் 9 வருடங்கள் கழித்து மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அசின் விஜய் கூட்டணி எப்போதும் ரசிகர்களின் பேவரைட் கூட்டணியாக இருந்ததால் இந்த படத்திலும் இக்கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.