Thalapathy 65 Movie Heroine Update
Thalapathy 65 Movie Heroine Update

தளபதி 65 படத்திற்காக பிரபல நடிகையுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 65 Movie Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டதால் தேதி வெளியாக இருந்த நிலையில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டதும் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட தீபாவளி அல்லது 2021 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் கடைசி 10 படங்களின் வசூல் என்ன? முழு விவரம்..!

ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கி 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமன்னா ஏற்கனவே தளபதி விஜயுடன் இணைந்து சுறா படத்தில் நடித்திருந்தார். சுறா திரைப்படம் தளபதி விஜயின் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தாலும் விஜய்க்கும் தமன்னாவுக்கும் இடையேயான காம்பினேஷன் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதன் காரணமாக மீண்டும் விஜய், தமன்னா கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.