Thalapathy 65 Director
தளபதி 65 படத்தை பிரபல இயக்குனர்களில் ஒருவரான மகிழ் திருமேனி இயக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்டது.

இந்த படத்தை அடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மீடியமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடன் இணைவார் என மில்லியன் டாலர் கேள்விகள் எழுந்திருந்த நிலையில் தமிழில் தடையற தாக்க, தடம் என வெற்றி படங்களை கொடுத்த மகிழ் திருமேனி இயக்கலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.