Thalapathy 65 Movie Director Update

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபல இயக்குனருடன் தளபதி விஜய் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 65 Movie Director Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த படத்தில் இருந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விளங்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தளபதி விஜய்க்காக இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஒரு கதையை உருவாக்கி வருகிறாராம்.

இவர்களது கூட்டணியில் குஷி என்ற திரைப்படம் 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.