YouTube video

Thalapathy 65 Latest Mass Update Vijay Fans Happy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய்யின் உறவினரான பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்‌.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், மகேந்திரன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் பரவி வரும் வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி போய் உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள பெயரிடப்படாத படமான விஜய் 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 இல் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் தற்போது இப்படம் குறித்த இன்னும் ஒரு சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது முருகதாஸ் படத்தின் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக முடிவடைந்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தொழிலதிபருடன் திருமணமா ஹன்சிகா கொடுத்த அல்டிமேட் பதில் – சிரிப்பலையில் அதிர்ந்த ட்விட்டர்!மேலும் இப்படத்திற்கு தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளரான தமன் இசையமைக்கலாம் என கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும், இந்த படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.