Thalapathy 65 Heroine Update
Thalapathy 65 Heroine Update

தளபதி 65 படத்தின் நாயகி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தள்ளிப் போய் உள்ளது.

இதனால் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு நடுவிலும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடிய சூர்யா.. காரணம் என்ன தெரியுமா? – புகைப்படங்களுடன் இதோ

தமன் இசையமைக்க உள்ள இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கலாம் என கூறப்படுகிறது.

விஜய்யின் கடந்த இரண்டு படங்களாகவே அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என தகவல்கள் பரவி பின்னர் அது பொய்யானது.

இந்த முறையும் அதே போல் தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்த முறையாவது உண்மையாகுமா? என்பதை படக்குழு அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.