Vijay 65
தளபதி 65 படத்தின் இயக்குனர் வைத்த ட்விஸ்ட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் விஜயுடன் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு பார்த்தீபன் விஜய் முதலில் நண்பன் படத்தையே என்னை தான் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு வசனம் எழுத சொன்னார். நாளை இன்னும் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என கூறியுள்ளார்.

இதனால் தளபதி 65 இயக்குனர் பார்த்திபன் தானோ?? அல்லது தளபதி 65-ல் பார்த்திபனும் இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.